மூத்தோருக்கான சேமிப்புகள்
1 ஜூலை 2019 முதல்
Mondays
- திங்கட்கிழமைகள்
- 3% தள்ளுபடி
- முன்னோடித் தலைமுறை அட்டையைக் காட்டவும்
Wednesdays
- புதிது
- புதன்கிழமைகள்
- 3% தள்ளுபடி
- மெர்டேக்கா அல்லது முன்னோடித் தலைமுறை அட்டையைக் காட்டவும்
Tuesdays
- செவ்வாய்க்கிழமைகள்
- 2% தள்ளுபடி
- 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர்கள் அடையாள அட்டையைக் காட்டவும்
இந்தச் சலுகை எதற்கானது?
1 ஜூலை 2019 முதல், மெர்டேக்கா தலைமுறையினருக்கு நாடெங்கிலும் அமைந்துள்ள FairPrice கடைகளில்* ஒவ்வொரு புதன்கிழமையும் 3% தள்ளுபடி கிடைக்கும். முன்னோடித் தலைமுறையினருக்கான தள்ளுபடி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு, திங்கள் மற்றும் புதன்கிழமைகளுக்கு மாற்றப்படுகிறது. இந்தத் தள்ளுபடிகள் ஒரு நாளில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் $200 வரையிலான கொள்முதல்களுக்கு (சிகரெட் மற்றும் சட்டபூர்வ பொருட்கள் தவிர்த்து: 4டி, டோட்டோ, சிங்கப்பூர் சுவீப், FairPrice அன்பளிப்புப் பற்றுச்சீட்டுகள் மற்றும் அன்பளிப்பு அட்டைகள்) கிடைக்கும். தகுதிபெறும் அட்டைகளை வைத்திருப்போர் சரிபார்ப்புக்காக நேரில் வரவேண்டும். அவர்களின் அடையாள அட்டையைக் காட்டும்படி ஊழியர்கள் கேட்கக்கூடும்.
FairPrice கடைகள் பேஷன் சில்வர் அட்டை, பேஷன் சில்வர் சலுகை அட்டை உள்ளிட்ட ஈசி-லிங்க் அட்டைகளின்வழி பணம் செலுத்துவதை ஏற்கும்.
FairPrice கடைகளில் Unity, FairPrice Finest, FairPrice Xtra ஆகியன உள்ளடங்கும். FairPrice Online உள்ளடங்கவில்லை.
கிழமை |
சலுகைத்திட்டம் |
நன்மை |
சரிபார்ப்புக்குத் தேவையானவை |
திங்கட்கிழமை |
முன்னோடித் தலைமுறை தள்ளுபடி திட்டம் |
3% தள்ளுபடி |
முன்னோடித் தலைமுறை அட்டை வைத்திருப்போர் நேரில் வருகையளித்து முன்னோடித் தலைமுறை அட்டையைக் காட்டவேண்டும். |
செவ்வாய்க்கிழமை |
மூத்தோர் தள்ளுபடி திட்டம் |
2% தள்ளுபடி |
60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் நேரில் வருகையளித்து அடையாள அட்டையைக் காட்டவேண்டும். |
புதன்கிழமை |
முன்னோடி மற்றும் மெர்டேக்கா தள்ளுபடி திட்டம் |
3% தள்ளுபடி |
முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறை அட்டை வைத்திருப்போர் நேரில் வருகையளித்து முன்னோடி அல்லது மெர்டேக்கா தலைமுறை அட்டையைக் காட்டவேண்டும். |
தள்ளுபடிகளுக்கு யாரெல்லாம் தகுதி பெறுகிறார்கள்?
குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் மேற்காணும் அட்டைகளைக் காட்டும் எவரும், அவருக்குரிய தள்ளுபடிகளைப் பெறத் தகுதி பெறுவார். ஒரு நாளில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் $200 வரையிலான கொள்முதல்களுக்கு (சிகரெட் மற்றும் சட்டபூர்வ பொருட்கள் தவிர்த்து: 4டி, டோட்டோ, சிங்கப்பூர் சுவீப், FairPrice அன்பளிப்புப் பற்றுச்சீட்டுகள் மற்றும் அன்பளிப்பு அட்டைகள்) தள்ளுபடிகள் கிடைக்கும். எங்கள் ஊழியர்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக அடையாளச் சான்றைக் காட்டும்படி கேட்கக்கூடும்.
எனது மெர்டேக்கா தலைமுறை அட்டை இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் புதன்கிழமைகளில் தள்ளுபடி பெறுவதற்கு எனது அடையாள அட்டையை / பேஷன் சில்வர் சலுகை அட்டையைப் பயன்படுத்தலாமா?
நடைமுறை சீர்நிலையின் காரணமாக, மெர்டேக்கா தலைமுறை அட்டையைக் காட்டுவோருக்கு மட்டுமே எங்கள் ஊழியர்களால் தள்ளுபடி வழங்க இயலும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நான் மெர்டேக்கா/முன்னோடித் தலைமுறை அட்டை வைத்திருக்கிறேன். ஆனால் எனது அட்டையை எடுத்துவர மறந்துவிட்டேன். நான் எனது அடையாள அட்டையைக் காட்டி தள்ளுபடி பெற முடியுமா?
நடைமுறை சீர்நிலையின் காரணமாக, மெர்டேக்கா தலைமுறை அட்டையைக் காட்டுவோருக்கு மட்டுமே எங்கள் ஊழியர்களால் தள்ளுபடி வழங்க இயலும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Warehouse Club-ல் மெர்டேக்கா தலைமுறை தள்ளுபடி செல்லுபடியாகுமா?
Warehouse Club-ல் விற்கப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே தள்ளுபடி வழங்கப்படுவதால் மெர்டேக்கா/ முன்னோடி / மூத்தோர் தள்ளுபடிகள் எதுவும் செல்லுபடியாகாது.
FairPrice இணையத்தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு ஏன் மெர்டேக்கா தலைமுறை தள்ளுபடி கிடையாது?
தகுதிபெறும் மெர்டேக்கா/ முன்னோடி / மூத்தோர் அடையாள அட்டையை ஊழியர் சரிபார்ப்பது அவசியம் என்பதால், இணையத்தளத்தில் பொருள் வாங்கும்போது தள்ளுபடி கிடையாது.
நான் FairPrice கடையில் பொருள் வாங்கும்போது எனது பேஷன் சில்வர் அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாமா?
ஆம், எல்லா FairPrice மற்றும் Unity கடைகளிலும் 1 ஜூலை 2019 முதல் பேஷன் சில்வர் அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். Warehouse Club இதற்கு விதிவிலக்கு. காசாளர் முகப்புகளிலும் சொந்தமாகப் பணம் செலுத்தும் சாதனங்களிலும் ஈசிலிங்க் அட்டைகள் ஏற்கப்படும்.